சுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை!

Bookmark and Share

சுல்தான் படத்தினால் சல்மான் கான்க்கு வந்த புதிய பிரச்சனை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி, ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படம் வெளியாகி முதல் 5 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. 

படம் வெற்றி அடைந்தது ஒருபுறம் இருந்தாலும், சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே விலைமாதுக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சல்மான் கான் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அன்சாரி என்பவர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி இந்த வழக்கை தொடுத்தார். சல்மான் கான், அனுஷ்கா சர்மா மற்றும் இயக்குநர் அலி ஜாபர் அப்பாஸ் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

“சுல்தான் படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதற்கு, ராயல்டி தொகையாக ரூ.20 கோடி தருவதாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். தற்போது அதனை தராமல் ஏமாற்றுகிறார்” என தன்னுடைய மனுவில் சபீர் குறிப்பிட்டுள்ளார்.  

இது குறித்து அவரது ஆலோசகர் சுதிர் குமார் ஓஜா கூறுகையில், “கடந்த 2010-ம் ஆண்டு சபிர், சல்கானிடம் தனது கதையை கூறியுள்ளார். அப்போது, இந்த கதையை படமாக எடுத்தால் நிச்சயம் பணம் தருவதாக உறுதி அளித்தார்” என்றார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை முதல் நிலை நீதித்துறை நிதிபதிக்கு மாற்றி தலைமை நீதிபதி ராம் சந்திர பிரசாத் உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions