ரஜினிக்கு பிறகு மீண்டும் அதிரடி வில்லனான சுமன்!

Bookmark and Share

ரஜினிக்கு பிறகு மீண்டும் அதிரடி வில்லனான சுமன்!

1980களில் நீச்சல் குளம், இளமை கோலம், கடல் மீன்கள், தீ, டார்லிங் டார்லிங் டார்லிங், அதிரடிபடை என பல படங்களில் நடித்த சுமன் அதன் பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

சுமார் 15 வருடங்களுக்குப்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக என்ட்ரி ஆனார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் மறுபடியும் தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கிய சுமன், ஏகன், படிக்காதவன், அலெக்ஸ் பாண்டியன், என்னை அறிந்தால் என தொடர்ந்து நடித்தார்.

இந்த படங்களில் மெயின் வில்லனாக இல்லாமல் கேரக்டர் ரோல்களில் நடித்த இவர் தற்போது, ஸ்ரீகாந்த் நடித்துள்ள சவுகார் பேட்டை படத்தில் மீண்டும் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். 

இதுபற்றி சுமன் கூறுகையில், “நான் ஹீரோவாக நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். என்றாலும், வில்லன் வேடங்களில் நடிக்கிறபோது நிறைய சுதந்திரம் கிடைக்கும். 

நிறைய வித்தியாசம் காட்ட முடியும். அந்த வகையில், ரஜினி சாருடன் நடித்த சிவாஜி படத்தில் எனக்கு ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து நான் எதிர்பார்த்த மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. 

அதனால் கிடைக்கிற வேடங்களில் நடித்து வந்தேன். இந்த நேரத்தில்தான் ஸ்ரீகாந்த் நடித்துள்ள சவுகார் பேட்டை படத்தில் எனக்கு மீண்டும் ஒரு அதிரடியான வில்லன் வேடத்தைக் கொடுத்துள்ளார் டைரக்டர் வடிவுடையான். இந்த மாதிரி பயங்கரமான வில்லனாக இதுவரை நான் நடித்ததில்லை. 

தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் எனது கேரக்டர் ரசிகர்களின் மனதை விட்டு விலகாது. அந்த வகையில் சிவாஜிக்கு பிறகு இந்த படம் எனக்கு திருப்தி கொடுத்துள்ளது” என்கிறார் சுமன்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions