மனைவியை பிரிந்தார் கிருஷ்ணா: விவாகரத்துக்கு சுனைனா காரணமா?

Bookmark and Share

மனைவியை பிரிந்தார் கிருஷ்ணா: விவாகரத்துக்கு சுனைனா காரணமா?

நடிகர் கிருஷ்ணா விவகாரத்துக்கு சுனைனா காரணமாக இருப்பதாக இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன.

கழுகு, அலிபாபா, கற்றது களவு, யாமிருக்க பயமே உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா மனைவி ஹேமலதாவை விவாகரத்து செய்ய குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள மனுவில் என் மனைவி என் மேல் சந்தேகப்பட்டார். நடிப்புத் தொழிலையும் சந்தேகித்தார். படப்பிடிப்பு முடிந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வரும்போது கதவை திறப்பது இல்லை. இதனால் பல நாட்கள் என் நண்பர்கள் வீடுகளில் தங்கி இருக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கிருஷ்ணாவுக்கு தொழில் ரீதியாக தன்னுடன் நடித்த கதாநாயகிகளுடன் நட்பு இருந்தது. இதனை மனைவி சந்தேகித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இதில் சுனைனாவின் பெயர் பலமாக அடிபட்டதாக தகவல் பரவியுள்ளது. சுனைனாவும் கிருஷ்ணாவும் வன்மம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் இருவரும் நெருக்கமாக நடித்த படங்கள் வெளிவந்தன. இதுவே சந்தேகத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

சுனைனாவுக்கு சொந்த ஊர் மகராஷ்டிராவில் உள்ள நாக்பூர் தெலுங்கு படங்களில் நடித்த இவர் ‘காதலில் விழுந்தேன்’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கிருஷ்ணா விவாகரத்துக்கு காரணமாக தன்னை தொடர்புபடுத்தி இணைய தளங்களில் செய்திகள் பரவி இருப்பதால் சுனைனா அதிர்ச்சியில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Post your comment





Related News
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
என்னை பார்த்து விஜய் சார் அப்படி சொன்னாரு - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் – நடிகை சுனைனா!
அப்பாவி பெண்ணாக சுனைனா!
அம்மாவை மேனேஜர் ஆக்கிய சுனைனா!
ரசிகர்களிடம் கருத்து கேட்கிறார் சுனைனா!
பாவாடை கட்டி குளிக்க மறுத்த சுனேனா
நம்பியார் படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம் - இயக்குநர் பேட்டி!
பெயர் மாற்றியதால் ஜாக்பாட்:ராய்லட்சுமி பூரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions