அப்பாவி பெண்ணாக சுனைனா!

Bookmark and Share

அப்பாவி பெண்ணாக சுனைனா!

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இப்படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்த சுனைனா, கடைசியாக ‘வன்மம்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜீவா, பாபி சிம்ஹா கதாநாயகன்களாவும், சுனைனாவுடன் காஜல் அகர்வாலும் கதா நாயகியாக நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் கதை குறித்து நடிகை சுனைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோடிட்டு காண்பித்துள்ளார். தற்போதைய மாடர்ன் காலத்தில் நடைபெறும் காதல் பிரேக் அப் மற்றும் மீண்டும் காதல் ஏற்படுவது தொடர்பான கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.

இந்த படத்தில் சுனைனா ஒருதலையாக ஜீவாவை காதலிப்பதாகவும், ஆனால் ஜீவாவுக்கு காஜல் அகர்வால் மீதுதான் காதல் என்றும், ஜீவாவை தன் பக்கம் இழுக்க சுனைனா செய்யும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் இருந்து ஜீவா தப்பிக்கும் விதம்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சுனைனா அமைதியான மற்றும் அப்பாவி பெண்ணாகவும், காஜல் அகர்வால் மாடர்ன் காலத்து போல்டான பெண்ணாகவும் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது. இப்படத்தை டி.கே. இயக்கி வருகிறார்.


Post your comment





Related News
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
என்னை பார்த்து விஜய் சார் அப்படி சொன்னாரு - பிரபல நடிகை ஓபன் டாக்.!
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் – நடிகை சுனைனா!
மனைவியை பிரிந்தார் கிருஷ்ணா: விவாகரத்துக்கு சுனைனா காரணமா?
அம்மாவை மேனேஜர் ஆக்கிய சுனைனா!
ரசிகர்களிடம் கருத்து கேட்கிறார் சுனைனா!
பாவாடை கட்டி குளிக்க மறுத்த சுனேனா
நம்பியார் படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம் - இயக்குநர் பேட்டி!
பெயர் மாற்றியதால் ஜாக்பாட்:ராய்லட்சுமி பூரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions