அரண்மனை டீமை சுந்தர்.சி ஓரங்கட்டியது ஏன்?

Bookmark and Share

அரண்மனை டீமை சுந்தர்.சி ஓரங்கட்டியது ஏன்?

ஆம்பள படத்தின் அதிர்ச்சி தோல்வி காரணமாக அரண்மனையைத் தொடர்ந்து மறுபடியும் பேய் கதை பக்கம் திரும்பி நிற்கிறார் சுந்தர்.சி. ஹன்சிகா, சந்தானம், லட்சுமிராய், ஆண்ட்ரியா, வினய் என ஒரு நட்சத்திர பட்டாளத்தை வைத்து அவர் இயக்கிய அரண்மனை படம் ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தழுவல் என்று அப்படம் வெளியான நேரத்தில் கூறப்பட்டாலும், படம் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது.

அதன்காரணமாக, மீண்டும் அரண்மனை-2 என்ற பெயரில் தனது புதிய படத்தை பேய் கதையில் இயக்க களமிறங்கியிருக்கும் சுந்தர்.சி முந்தைய படத்தில் நடித்தவர்களே இந்த படத்திலும் நடித்தால், நடிப்பில் பழைய சாயல் இருக்கும் என்பதால், அதில் நடித்தவர்களை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லையாம்.

மாறாக, சித்தார்த், த்ரிஷா, காஜல்அகர்வால், அஞ்சலி என முன்னணி நட்சத்திரங்களை ஒன்று சேர்த்திருப்பவர், காமெடியனாக முன்பு சந்தானத்தை நடிக்க வைத்தவர், இப்போது சூரியை நடிக்க வைக்கிறார்.

ஆக, இந்த படத்தில் நடிக்கும் அனைவருமே பேய் படங்களில் அதிகமாக நடித்திராதவர்கள் என்பதால் இந்த கூட்டணியும், தனது படமும் புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் சுந்தர்.சி.


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions