வெல்லிமூங்கா ரீமேக்கில் நடிக்கிறார் சுந்தர்.சி

Bookmark and Share

வெல்லிமூங்கா ரீமேக்கில் நடிக்கிறார் சுந்தர்.சி

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை என தொடர் ஹிட்டுக்களை கொடுத்த சுந்தர்.சிக்கு ஆம்பள சற்று சறுக்கியது. இப்போது இயக்குவதை விட்டுவிட்டு மீண்டும் நடிக்க இருக்கிறார்.

அவருக்காக அவரது மனைவி குஷ்பு தேர்வு செய்து வைத்திருக்கும் மலையாளப் படம் வெல்லிமூங்கா. கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. பிஜுமோன், அஜு வர்க்கீஸ், ஆசிப் அலி, கே.பி.லலிதா நடித்திருந்தனர். ஜிபு ஜோசப் இயக்கி இருந்தார்.

2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான படம் 20 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 40 வயதை கடந்த மாமச்சனுக்கு (பிஜுமேனன்) எந்த வேலை வெட்டியும் கிடையாது, கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

ஒரு நாள் ஒரு வேலையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும்போது கதர் வேட்டி, சட்டை அணிந்து செல்கிறார். அவரை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு தனி மரியாதை கொடுக்கிறார்கள். அப்போதுதான் கதர் வேட்டி சட்டைக்கும், கட்சிக்கும் இருக்கும் சக்தியை உணர்கிறார்.

மறுநாளே கதர் வேட்டி சட்டை அணிந்து ஒரு தேசிய கட்சியில் சேர்ந்து மாநில தலைவர் வரைக்கும் வளர்கிறார். இதனால் கட்சியில் அவருக்கு எதிரிகள் அதிகமாகிறார்கள்.

அடுத்த தலைவர் தேர்தலில் அவர் ஜெயிக்க வேண்டும். இதற்கிடையில் அவர் தேவாலயத்தில் சந்திக்கும் ஒரு இளம் பெண்ணை காதலிக்கிறார். அந்த இளம் பெண் அவர் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணின் மகள்.

இதனால் இவரின் காதலுக்கு முன்னாள் காதலி ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். தலைவர் பதவியை அடையவும், காதலியை கைபிடிக்கவும் மாமச்சன் ஆடும் சதுரங்க ஆட்டமே படத்தின் கதை.

இந்தப் படத்தை தனது அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் ரீமேக் செய்ய இருக்கிறார் குஷ்பு. அதில் பிஜுமேனன் நடித்த மாமச்சன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் சுந்தர்.சி. வெறொருவர் இயக்க இருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions