குஷ்பூ தயாரிப்பில்... சுந்தர்.சி இயக்கத்தில் வைபவ்!

Bookmark and Share

குஷ்பூ தயாரிப்பில்... சுந்தர்.சி இயக்கத்தில் வைபவ்!

வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக ஏதாவது ஒரு வேடத்தில் தலைகாட்டுவார் வைபவ். இப்படியாக பல படங்களில் தலைகாட்டியதும் வைபவுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

அதனால் வெங்கட்பிரபு படங்களில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்ததுபோதும்... இனி ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடினார். டமால் டுமீல் என்ற படத்தில் வைபவுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் சோர்ந்து போனார் வைபவ். பிறகு கப்பல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஷங்கரின் உதவியாளர் இயக்கிய இந்தப்படம் பிசினஸ் ஆகாமல் முடங்கிக்கிடந்தது.

பிறகு ஷங்கர் தன்னுடைய பேனரில் வெளியிட்டார். கப்பல் படத்தில் விரவிக்கிடந்த ஆபாசத்தினால் கவிழாமல் தப்பித்தது. இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார் வைபவ்.

ஆம்பள படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்தநிலையில், சுந்தர்.சி அடுத்தபடியாக பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், வைபவ்வை வைத்து அடுத்தப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை குஷ்பூ தயாரிக்கிறார்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions