அரண்மனை-2வுக்காக பிரமாண்ட செட் அமைத்த சுந்தர்.சி!

Bookmark and Share

அரண்மனை-2வுக்காக பிரமாண்ட செட் அமைத்த சுந்தர்.சி!

அரண்மனை படத்தை வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, சந்தானம், கோவை சரளா ஆகியோரை வைத்து இயக்கிய சுந்தர்.சி., அப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூல் சாதனை புரிந்தது.

அதனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சித்தார்த்- த்ரிஷாவை வைத்து இயக்குகிறார். அவர்களுடன் ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்பட பலர் நடிக்கின்றனர்.

முந்தைய படம் ஹிட்டானபோதும் அந்த படம் ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரீமேக் போன்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது.

அதனால் இந்தமுறை எந்த பழைய படங்களின் பாதிப்பும் இல்லாத வகையில் புதுமையான கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் சுந்தர்.சி.,அதோடு, பேய் படம் என்றபோதும் தனது வழக்கமான பாணி காமெடியையும் சரிபாதி கலந்து படமாக்கி வந்த சுந்தர்.சி., சென்னையில் ஒரு பிரமாண்ட அரண்மனை செட் அமைத்து வந்தார்.

அதில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் தயாராகி வந்தனர். ஆனால் அவர்கள் கால்சீட் கொடுத்த நேரம் பார்த்து தமிழ்த்திரையுலகில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் பல மாதங்களாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய அரண்மனை செட் உபயோகப்படுத்தப்படாமல் நின்று கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions