சுந்தர்.சிக்கு அன்று சிற்பி, இன்று ஆதி!

Bookmark and Share

சுந்தர்.சிக்கு அன்று சிற்பி, இன்று ஆதி!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் ஹிட்டானது. எனவே அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி விரைவில் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி நீண்டகாலமாகவே அடிபட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வந்தார் சுந்தர்.சி.  ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்தது மட்டுமல்ல அவருக்கு மிகவும் திருப்திகரமாகவும் வந்திருப்பதாக தோன்றியதாம். திட்டமிட்டபடி அரண்மனை-2 படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சுந்தர்.சி. 

முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா இப்படத்திலும் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். இவருடன் புதிய இணைப்பாக த்ரிஷா, சித்தார்த், சூரி ஆகியோரும் இணைந்துள்ளனர். சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் சூரியை காமெடி வேடத்திற்கு புக் பண்ணி இருக்கிறார் சுந்தர்.சி. 

விஷால் நடிப்பில் சுந்தர்.சி. இயக்கிய ஆம்பள படத்தில் ஹிப் பாப் தமிழா ஆதியை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் சுந்தர்.சி.தற்போது அரண்மனை- 2 படத்திற்கும் ஆதிதான் இசை அமைப்பாளர். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என ஒரு காலத்தில் சுந்தர்.சிக்கு சிற்பி ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார். இவர்களது கூட்டணியில் அழகிய லைலா உட்பட ஏராளமான ஹிட் பாடல்கள் அமைந்தன.

யார் கண்பட்டதோ ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சுந்தர்.சி தற்போது ஆதியை தன் ஆஸ்தான இசையமைப்பாளராக்கி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார்.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions