அரண்மனை 2-ம் பாகத்திற்கு வில்லன் ரெடி

Bookmark and Share

அரண்மனை 2-ம் பாகத்திற்கு வில்லன் ரெடி

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை படம் பெரிய வெற்றி பெற்றது. ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, வினய் நடிப்பில் உருவாகியிருந்த படம் திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியிருந்தது. 

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ 2-ம் பாகத்தை எடுக்க சுந்தர்.சி முன்வந்தார். அதற்கான வேலைகளிலும் களமிறங்கினார். அதன் தொடர்ச்சியாக ‘அரண்மனை’ 2-ம் பாகத்தை தொடங்குவதாக அறிவித்தார். 

இப்படத்திலும் ஹன்சிகா மொத்வானியே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், திரிஷா, சித்தார்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘அரண்மனை’ முதல் பாகத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு சூரியை காமெடியனாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. மேலும், இன்னொரு நாயகி தேவைப்படுவதால் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது, வில்லன் கதாபாத்திரத்திற்கு ‘ஆடுகளம்’ நரேன் தேர்வாகியிருக்கிறார். 

மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். சுந்தர்.சி படத்துக்கு இரண்டாவது முறையாக இவர் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜுலையில் தொடங்க இருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions