அரண்மனை2 படத்தின் சிக்கலைத் 10 இலட்சம் கொடுத்து தீர்த்த சுந்தர்.சி

Bookmark and Share

அரண்மனை2 படத்தின் சிக்கலைத் 10 இலட்சம் கொடுத்து தீர்த்த சுந்தர்.சி

திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘நடிகர் ரஜினிகாந்த், லதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தை 1978-ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டேன்.

இந்தப் படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி அரண்மனை என்ற பெயரில் இயக்குனர் சுந்தர்.சி எடுத்துள்ளார்.

இந்தப் படத்துக்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து இரு திரைப்படங்களையும் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய இந்த கோர்ட்டு வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்தது.

அவரும் படங்களைப் பார்த்து, இரு திரைப்படங்களும் ஒரேவிதமான கதைதான் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், அரண்மனை-2 என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி எடுத்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேனியல் அரிபாபு, இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக முடிவுக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி, ‘மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக முடிவுக்கு வந்து விட்டனர்.
படத்தின் கதை உரிமைக்காக ரூ.10 லட்சம் கேட்பு காசோலையாக வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறி, இருதரப்பினரும் செய்துகொண்ட ஒப்பந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி சமரச பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

அரண்மனை இரண்டாம்பாகமும் வெளியாகிவிட்ட நிலையில் பத்துஇலட்சம் கொடுத்து இரண்டு படங்களுக்கான சிக்கலையும் சரி செய்துகொண்டார் சுந்தர்.சி என்று சொல்கிறார்கள்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions