சுந்தர்.சி படத்தில் சமந்தா?

Bookmark and Share

சுந்தர்.சி படத்தில் சமந்தா?

அஞ்சான் படத்தில் சமந்தா நடிப்பதற்கு முன்பு வரை சித்தார்த்-சமந்தா காதல் கல்யாண கதைகள் மீடியாக்களில் சூடு பறக்க வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், அந்த படத்தில் சமந்தா சூடு காட்டி நடித்ததை அடுத்து அதை தாங்கிக்கொள்ள முடியாமல் காதலையே முறித்துக்கொண்டார் சித்தார்த்.

அதற்கு முன்பு வரை அவர்களின் காதல் பற்றி மீடியாக்கள் கேள்வி கேட்டால், அடுத்தவங்க வீட்டு ஜன்னலை உங்களால் எட்டிப்பார்க்காம இருக்கவே முடியாதா? என்று கேட்டவர், பின்னர் அந்த விசயம் கதம் கதம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார்.

ஆக, அதுவரை கட்டுப்பாட்டுக்குள் சிக்கி சிதைந்து கொண்டிருந்த சமந்தா, பின்னர் கத்தி, பத்து எண்றதுக்குள்ள என்று சுதந்திரமாக சிறகடித்தவர், இப்போது மீண்டும் விஜய்யுடன் நடிப்பதோடு, தனுசுடன் 2 படங்கள், சூர்யாவுடன் ஒரு படம் என்று செம பிசியாகி விட்டார்.

இதனால் அடுத்த ஆண்டு சமந்தாவின் ஆண்டாகி விடும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதனால், தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை அடுத்து சித்தார்த்தை வைத்து அரண்மனை-2 படத்தை இயக்கும் சுந்தர்.சி அப்படத்திற்கு த்ரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகளை புக் பண்ணியபோதும், தற்போது சமந்தாவிடமும் பேசியிருக்கிறாராம்.

ஆனால், இந்த சேதி சித்தார்த்துக்கு எட்டியபோது காண்டாகி விட்டாராம். ஆனபோதும் தனது மார்க்கெட் நிலையை கருதி அடங்கி விட்டாராம். ஆனால் சமந்தா அப்படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது சித்தார்த்துக்கு ஆறுதல் செய்தி.

இருப்பினும், ஒருவேளை அவர் கமிட்டாகி விட்டால், காதலித்து பிரிந்து போன சிம்பு-நயன்தாரா மீண்டும் நடிக்கவில்லையா? அதேபோல்தான் இதுவும் என்று தனது அபிமானிகளுக்கு பதில் கொடுத்து ஆப் பண்ணவும் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் சித்தார்த்.

 


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions