சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்

Bookmark and Share

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா என பல கலைஞர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று பிரான்ஸில் நடக்க இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் சங்கமித்ரா படத்தின் கதை என்ன என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.அதாவது, சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை.

பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம்.

இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.


Post your comment





Related News
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரணம் திரைப்படத்தில் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் !
மீண்டும் ஆஸ்கரில் இசைபுயல் ரஹ்மான்! மிக முக்கிய பிரபலத்துடன் கூட்டணி
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.!
மகனை அழைத்துக்கொண்டு ரோட்டிற்கு செல்லுங்கள்- ரகுமான் அம்மாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
வெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்
ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்து மழையில் நனைய வைக்கும் தளபதி ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions