சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

தற்போதைய நிலவரப்படி மார்க்கெட்டில் இருக்கிற நடிகர்களை வைத்து படம் இயக்கினால்தான் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் இருக்கிறார் சுந்தர்.சி., அதனால்தான், சித்தார்த், விஷால், ஹன்சிகா என் முன்னணி கலைஞர்களை முன்வைத்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், அவரது அடுத்த படம் அரண்மனை-2 என்று கூறப்பட்டபோதும், அதுபற்றி இன்னும் அவர் அறிவிக்கவில்லை. அதோடு, சுந்தர்.சியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இதுபற்றி இன்னும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது காக்கி சட்டை வெளியாகயிருக்கும் நிலையில், ரஜினி முருகன் படத்தில் அவர் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது பற்றி அவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில், கணவர் சுந்தர்.சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள குஷ்பூ, சிவகார்த்திகேயனுக்கு தூது அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் காக்கி சட்டை திரைக்கு வந்ததும் சுந்தர்.சி - சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions