இயக்குனர், நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் போலீஸ் கமிஷனருடன் சந்திப்பு

Bookmark and Share

இயக்குனர், நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் போலீஸ் கமிஷனருடன் சந்திப்பு

பிரபல சினிமா இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசினார். தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக கமிஷனரை சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்தார். 

அவர் மீது ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் மனு கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக அவர் கமிஷனரை சந்தித்து பேசி இருக்கலாம் என்று பேசப்பட்டது.

ஆனால் அவர் ஏற்கனவே கொடுத்த புகார் மனு ஒன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், நிலுவையில் இருப்பதாகவும் அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் மீண்டும் ஒரு மனு கொடுத்ததாகவும் தெரிய வந்தது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions