மீண்டும் ஆர்.சுந்தர்ராஜன்-இளையராஜா கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் ஆர்.சுந்தர்ராஜன்-இளையராஜா கூட்டணி!

இயக்குனர் ஆர். சுந்தர்ராஜனுக்கு தமிழ் திரை உலகில் அறிமுகம் தேவையில்லை. இளையராஜாவுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அண்மையில் நிலாச்சோறு என்ற படத்தை இளையராஜா இசையில் எடுத்தார்.

ஐப்பசி மாத நிலவு போல பிரகாசிக்கவில்லை இருந்த போதும் தன் முயற்சியில் சோர்ந்து விடாமல் அடுத்தப்படத்துக்கு தயாராகி விட்டார். இந்த படத்துக்கும் இளையராஜா தான் இசை.

தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் ராஜா பிஸியாக இருக்கிறார். இது முடிந்ததும் சுந்தர்ராஜன் படம் தொடங்க உள்ளது அன்னக்கிளி படத்தில் பாடல்கள் ஹிட்டானது போல இந்த படத்திலும் பாடல்கள் அமையும்.

அதற்கான கதை இது. முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் படம் உருவாகிறது. தற்போது நடிகர் நடிகை தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions