சுந்தர்.சி ஒரு பாசமுள்ள அப்பா!

Bookmark and Share

சுந்தர்.சி ஒரு பாசமுள்ள அப்பா!

குஷ்பூ - சுந்தர்.சி தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே அப்பா செல்லங்கள் தான். எப்போதும் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் அப்பாவிடமே கேட்டு பெறுபவர்கள்.

அம்மா குஷ்பூ அரசியலில் பிஸியாக இருக்கிறார். எனவே அப்பாவிடம் செல்லம் அதிகமாகிவிட்டது. ஓய்வு நேரங்களில் உப்பு மூட்டை தூக்க வைப்பது, நீச்சல் குளத்தில் விளையாடுவது என்று அப்பாவுடன் பொழுதைக் கழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் மகள்கள். அம்மா இதையெல்லாம் ரசித்தாலும் அவருக்கு நேரமில்லை.

வெளியூர், வெளிநாடு சுற்றுலா போல போனாலும் அப்பாவுடன் பொழுதைப் போக்கவே மகள்கள் விரும்புகிறார்கள். சுந்தர்.சி.யை ஓய்வெடுக்கவே விடாமல் அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சுந்தர்சி.சியும் அலுப்பு காட்டாமல் அன்பைப் பொழிந்து வருகிறார் பாசமுள்ள பொறுப்புள்ள தந்தையாக.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions