நான் நடிக்கவில்லை - பிரபல பின்னணி பாடகி

Bookmark and Share

நான் நடிக்கவில்லை - பிரபல பின்னணி பாடகி

டோலிவுட்டில் பிரபல பின்னணி பாடகியான சுனிதா, பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோத்சவம் படத்தில் தான் நடிக்கவில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது,

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நான் சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பிரபல நடிகர் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் படத்தில் அவருக்கு மைத்துனியாக நடிக்க இருப்பதாகவும் வெளிவந்துள்ளது.

ஆனால் இதில் உண்மை இல்லை. நான் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய மற்றும் தென் மேற்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் என்னால் படத்தில் நடிக்க நேரம் இல்லை என்றார்.

இதனை அடுத்து அவரது ரசிகர்கள் ஏன் செய்தி வெளியானதும் அவர் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தார் என்று குழம்பி போய் உள்ளனர். மேலும் அவர்கள்  பெறும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அவர்  நடிகையாக வர வேண்டும் என்பதில் அவரது ரசிகர்களுக்கு அவ்வளவு ஆர்வம். சுனிதா தனது வசீகர குரலாலும், அழகிய தோற்றத்தாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சேகர் கம்முலாவின் அனாமிகா படத்தின் பிரோமோஷன் சாங்கில் நடித்து இருக்கிறார். இதைத்தவிர அவர் திரையில் தலை காட்டியது கிடையாது.  இந்நிலையில் அவரை சில இயக்குனர்கள் சந்தித்து பேசியதாகவும், அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக  தெரிகிறது. அவர் ஒருவேளை இதை விட நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions