என்.டி.ஆர் விருது வென்ற பிரபல பின்னணி பாடகி சுனிதா

Bookmark and Share

என்.டி.ஆர் விருது வென்ற பிரபல பின்னணி பாடகி சுனிதா

மறைந்த பழம்பெரும் நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆர் அவர்களின் பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அறக்கட்டளையின் கீழ் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.  

இந்த ஆண்டிற்கான என்.டி.ஆர் விருது  பிரபல பின்னணி பாடகி சுனிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று குண்டூரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பழம்பெரும்  நடிகை வாணிஸ்ரீ  கலந்து கொண்டு பாடகி சுனிதாவிற்கு என்.டி.ஆர் விருது வழங்கி பாராட்டினார்.

திரைப்படங்களில்  பாடல்கள்  பாடுவது மட்டுமல்லாது  சுனிதா முன்னணி நடிகைகள் பலருக்கு திரைப்படங்களில் பின்னணி பேசியுள்ளார். தான் என்.டி.ஆர் விருது வென்றதை மகிழ்ச்சியுடன் பாடகி சுனிதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions