டாப் ஹீரோயின்களுக்கு சவால் விடும் சன்னி லியோன்

Bookmark and Share

டாப் ஹீரோயின்களுக்கு சவால் விடும் சன்னி லியோன்

கடும் விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் பாலிவுட்டில் இப்போது அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது சன்னி லியோன் தான். சமீபத்தில் வெளிவந்த ஏக் பஹேலி லீலா கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது.

அடுத்து வர இருக்கிறது மஸ்திஸாதே. இது செக்ஸ் காமெடி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் பிரதீஷ் நந்தி தயாரிக்கிறார். இதில் 2 வேடங்களில் நடிக்கிறார் சன்னி. அடுத்து டினா அண்ட் லோலா.

இதில் சன்னியும் கன்னட நடிகை கரீஷ்மா டானுவும் போட்டி போட்டு கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். ஹாலிவுட் படமான சார்லீஸ் ஏஞ்சல் போன்று இது காமெடி கிளாமர் படம். சன்னி பாய்ந்து பாய்ந்து சண்டையெல்லாம் போடுகிறார். குச் குச் லோச்சா ஹை என்கிற படத்தின் டைட்டிலே செம கிக்கா இருக்குதுல்ல.

இதுவும் சன்னி நடிக்கிற படம் தான். ஒரு பெரிய வயதான தொழில் அதிபருக்கு ஒரு கவர்ச்சி நடிகை மீது ஆசை. அவரை நெருங்க தொழில் அதிபர் போடும் திட்டங்களும், நடிகை அவருக்கு தண்ணி காட்டுவதும்தான் கதை.

தமிழில் கமல் நடித்த மீண்டும் கோகிலாவை கொஞ்சம் அப்படி இப்படி எடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு படம் இது. இவைகள் தவிர இன்னும் தலைப்பு வைக்காத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

2016 இறுதி வரை சன்னியின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. இதனால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் சன்னி மீது செம காண்டில் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions