'பேருக்கு வில்லன்.. ஊருக்கு நல்லவன்' - சன்னி வெய்னின் புதிய அவதராம்..!

Bookmark and Share

'பேருக்கு வில்லன்.. ஊருக்கு நல்லவன்' - சன்னி வெய்னின் புதிய அவதராம்..!

துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ' வில் 'குருடி' என்கிற கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் சசிகுமார் ரேஞ்சுக்கு நடிப்பால் அசத்தியவர் தான் சன்னி வெய்ன்.

இது தவிர 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி'  என இந்த இரண்டு படங்களிலுமே துல்கரின் நண்பனாய் துணைக்கு வந்த நடிகர் சன்னி வெய்னை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது.. இரண்டாவது கதாநாயகனாகவும் ஹீரோவின் நண்பனாகவும், சீரியஸ் காமெடி, குணச்சித்திரம் என வெரைட்டியாக நடித்து வந்த சன்னி வெய்ன் சமீபத்தில் வெளியான 'சாரதி' படம் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்றார்.

அதை தொடர்ந்து தற்போது பிரவீண் பிரபாகரன் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்திலும் சன்னி தான் ஹீரோ.. ஆனால் படத்தின் பெயரோ 'வில்லன்'. 'செகன்ட் ஷோ' படத்தில் சன்னியுடன் துணை இயக்குனராக வேலை பார்த்தபோது ஏற்பட்ட நட்ப்பின் அடிப்படையில் அவரை தனது படத்திற்கு ஹீரோ ஆக்கியுள்ளார் இயக்குனர் பிரவீண்.

இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சன்னி வெய்ன். ஒரு போலீஸ் அதிகாரியின் உண்மை வாழ்க்கையைத்தான் 'வில்லன்' பிரதிபலிக்குமாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions