இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் நாயகன் தனுஷ்!

Bookmark and Share

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் நாயகன் தனுஷ்!

நடிகர் தனுஷ் இன்று தனது 28வது பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடும் இவர்.. அவரது தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க, 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.இவரது இயற்பெயர் வெங்கட்பிரபு. ஏற்கனவே 'பிரபு' என்ற பெயரில் நடிகர் இருந்ததால், 'தனுஷ்' ஆனார்.

'காதல் கொண்டேன்' படத்தில் அவர் நடித்த பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு, தமிழ்த்திரையுலகில் அவருக்கான இடத்தை ஊர்ஜிதம் செய்தது.'திருடா திருடி' படத்தின் மூலமாக வசூல் மற்றும் வரிசையாக வெற்றி படங்கள் என முன்னணி நடிகராக வலம் வர தொடங்கினார். அப்படத்தில் இடம்பெற்ற' மன்மத ராசா' தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இதன் மூலம் இவர் நடித்த முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட்.!

நடிக்க வருவதற்கு முன் SNOOKER போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் தனுஷ் தான் திரைத்துறையில் தனுஷிற்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. பார்த்தால் பேசிக் கொள்வார்கள் அவ்வளவு தான்.பார்ட்டி, பப் என எங்கும் போக மாட்டார். தனிமை விரும்பி.

தமிழ் திரையுலகில் ஒரு கேங்ஸ்டர் ஒருவரின் கதை என்ற வகையில் படங்களை தேர்வு செய்தால் அதில் இவரது நடித்த 'புதுப்பேட்டை' ஒரு முக்கியமான படம்.பல கதாநாயகர்கள் தற்போது சிக்ஸ் பேக் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை தான் நடித்த 'பொல்லாதவன்' படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தவர் தனுஷ்.

திருமணம் ஆனவுடன் ரஜினி கொடுத்த ருத்ராட்சையை கழுத்தில் அணிந்து இருக்கிறார். படங்களில் நடிக்கும்போது கூட அவர் அதை கழட்டியது இல்லை.

'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது பெறும் முதல் இளவயது நடிகர் தனுஷ் என்பது அவரது ரசிகர்களுக்கான ஸ்பெஷல் தகவல்.தனது மாமனார் ரஜினி மீது தனிப்பாசம் உண்டு. தனக்கு தேசிய விருது கிடைத்த போதும் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கொண்டாட்டத்தை தவிர்த்தார்.

தமன்னா, ஸ்ரேயா, சோனியா அகர்வால் ஆகிய மூவரும் தனுஷுடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார்கள்.சுப்பிரமணியம் சிவா, செல்வராகவன், மித்ரன் ஜவஹர், வெற்றி மாறன் ஆகிய இயக்குனர்களின் முதல் ஹீரோ இவர் தான்.இவர் நடித்தவற்றில் 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தம புத்திரன்', 'சீடன்' ஆகியவை ரீமேக் படங்கள்.'சீடன்', 'குசேலன்' என இரண்டு படங்களில் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இப்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'இரண்டாம் உலகம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ஒரு அழகான காதல் கதையில் நடிக்க இருக்கிறார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இப்படி திரை உலகில் தடம் பதித்து பல முன்னனி ஹிரோக்கள் வியக்கும் வண்ணம் பல முன்னனி படங்களை நடித்து ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தனுஷ்க்கு எமது Tamilstar.com(தமிழ் ஸ்டார்) இணையத்தளம் ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிப்பதில் பெரும் உவகை அடைகிறது!


Post your comment

Related News
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!
அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் 24!
கன்னட ரீமேக் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சமந்தா!
கேரளாவில் 24 படம் செய்த வசூல் சாதனை!
24 படத்தின் மிரட்டலான சென்னை வசூல் விவரம்!
24 படத்தை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்!
24 திருட் டிவிடி விவகாரம் – ஞானவேல் ராஜா எடுத்த அதிரடி முடிவு!
24 படத்தின் திருட்டு விசிடி விஷயத்தில் மாட்டிய முன்னணி திரையரங்கம்!
விரைவில் 100 கோடி கிளப்பில் இணையவிருக்கும் 24!
கேரளாவில் 24 செய்த வசூல் சாதனை!

Latest Gallery


About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2016. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions