உலகம் சுற்ற இருக்கும் சூப்பர் சிங்கர்கள்

Bookmark and Share

உலகம் சுற்ற இருக்கும் சூப்பர் சிங்கர்கள்

நேயர்களின் பாடும் திறமையை வெளிக்கொண்டு வரும் சூப்பர் சிங்கர் கான்செப்ட் 2006ம் ஆண்டு விஜய் டி.வியால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு பெயரில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த பத்து ஆண்டுக்குள் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள். நிறைய சீசன்கள், ஜூனியர், சீனியர் என்ற பிரிவுகள் என பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் பல பின்னணி பாடகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்கள். ஆரம்பத்தில் சேனல் வளாகத்தில் உள்ள சிறிய அரங்கில் நடந்த போட்டிகள் பின்னர் சினிமா ஸ்டூடியோக்களில் உள்ள புளோர்களில் அரங்கம் அமைத்து, பிரமாண்ட செட்டுகள் போட்டு நடத்தப்பட்டது.

தற்போது சென்னையில் நடந்து வந்த இந்த போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக சூப்பர் சிங்கர் போட்டிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட இருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் லண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். முதலாவதாக சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகள் வருகிற ஏப்ரல் 3ந் தேதி லண்டனில் நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து மற்ற போட்டிகளும் பல்வேறு நாடுகளில் நடக்கும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions