ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி!

Bookmark and Share

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி!

ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்காக சமீபத்தில் மலேசியா சென்ற ரஜினிக்கு அங்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலேசியாவில் தற்போது பிசியாக படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

நீண்டநாளாக தன்னை பார்க்க நினைத்த அந்த ரசிகரை நேரில் வரவழைத்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். மிகப்பெரிய நடிகர், பிசியான நேரத்திலும் ஒரு ரசிகரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரை சந்தித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ரஜினி அந்த ரசிகருடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions