ரஜினிக்கு டத்தோ விருது. மலேசிய அரசு முடிவு!

Bookmark and Share

ரஜினிக்கு டத்தோ விருது. மலேசிய அரசு முடிவு!

மலேசிய அரசு சமூக சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு டத்தோ விருது வழங்கி வருகிறது.  டத்தோ விருதை இதுவரை வாங்கியவர்களைப் பார்த்தால், ஒருவரின் பிரபலத்தை வைத்தே இவ்விருது வழங்கப்படுவது தெரியவரும். 

மலாக்கா ஆளுநர் துன் முகமட் கலில் யோக்கோபின் ரஜினியின் தீவிர ரசிகராம்.  அதற்கேற்ப மலேசியா போய் இறங்கியிடவுடன் ரஜினி சந்தித்ததும் இந்த ஆளுநரைதான்.  

ஷாருக்கான், ஜாக்கிசான் இருவருக்கும் மலேசியாவின் கவுரவ பட்டமான டத்தோ பட்டத்தை வழங்கி கவுரவித்ததும் அவர்தான்.  அவர் முயற்சியில் ரஜினிக்கு டத்தோ பட்டம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டதாம்.

மலேசிய அரசின் டத்தோ விருதை ரஜினிக்கு வழங்க வேண்டும் என மலேசியாவில் உள்ள அவரது ரசிகர்கள் சில மாதங்களுக்கு முன்  கையெழுத்து இயக்கம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேஷியாவில் அரசு உயர் பதவியில் உள்ள சிலருக்கு ஒரு அதிகாரம் உள்ளது.  அதாவது அவர்கள் தங்களுக்கு விருப்பமான எவருக்கு வேண்டுமானாலும் சில அடிப்படையில் டத்தோ என்ற கௌரவப் பட்டத்தை வழங்கலாம்.  

அதனால் பெரிய நன்மைகள் இல்லை என்றாலும் டத்தோ பட்டம் சூட்டப்பட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாக எண்ணுவார்கள்.  டத்தோ பட்டத்தை வழங்கும் அதிகாரம் உள்ளவர்களுடன் பழகும் பலரும் மலேஷியா நாட்டில் டத்தோக்களாக இருக்கிறார்கள்.

மலேசியாவில் மிகப்பெரிய விழா எடுத்து அவருக்கு இந்த விருதை தரவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியாக மலேசியா போனவர், டத்தோ ரஜினிகாந்த்தாக திரும்புறார்.  

நடிகர் ராதாராவி மலேஷியா சென்றபோது அங்குள்ள முக்கிய பிரமுகர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்தப் பிரமுகரால் ராதாரவிக்கு சில ஆண்டுகளுக்கு முன் டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டதை சினிமாத்துறையில் யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராதாரவியின் டத்தோ பட்டத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத சினிமாத்துறை, நடிகர் ரஜினியின் டத்தோ பட்டத்தை எப்படி கொண்டாடுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

டத்தோ பட்டம் கிடைத்த, கிடைக்கின்ற, கிடைக்கப்போகின்ற அனைவருக்கும் தமிழ் ஸ்டார் இன் வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions