இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Bookmark and Share

இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இன்று நான்காவது நாளாக ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன் அரசியல் குறித்த நிலைபாட்டினை 31 ஆம் தேதி அறிவிக்கவிருப்பதை குறித்து இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது என்று கூறினார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது, 

" கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள்.  சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு அந்த பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே அந்த பெயர் வந்தது. அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர். 

ஒரு முறை நானும் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களும் கோவை சென்றிருந்த போது ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாங்கள் சென்ற போது ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர்.

பின் விழா முடிந்தவுடன் சிவாஜி  ஐயாவிடம் இது குறித்த  என் வருத்தத்தை தெரிவித்தேன். அதற்கு அவர் ரஜினி இதற்கு பெயர் தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம். 

எனவே எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். " என்று அவர் கூறினார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
அடுத்த வருடம் சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions