அரசியல் படத்தை எதிர்பார்க்கும் சுரபி!

Bookmark and Share

அரசியல் படத்தை எதிர்பார்க்கும் சுரபி!

விக்ரம் பிரபு நடித்த இவன் வேறு மாதிரி என்ற படத்தில் அறிமுகமானவார் சுரபி. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தற்போது ஜெய் நடிக்கும் புகழ் என்ற படத்தில் நடித்துக்கொணடிருக்கிறார்.

இதையடுத்து அவருக்கு புதிதாக எந்த படமும் கைவசம் இல்லை. பல கம்பெனிகளுக்கு சென்று படவேட்டை நடத்தியவருக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. அதனால் இப்போது இந்த படத்தைதான் மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார் சுரபி.

மேலும், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போது துளியும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிசனாக பேசிய அவர், இப்போது பாடல் காட்சிகளில் ஓவர் கிளாமரை வெளிப்படுத்தி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதோடு இந்த படத்தில் முதன்முறையாக அரசியல் கதையில் ஜெய் நடிப்பதால் இப்படம் அவருக்கு மட்டுமின்றி தனக்கும் திருப்புமுனையாக அமையும் என்று எதிபார்க்கிறார் சுரபி.

மேலும், புதிய படங்களுக்கான முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கும் சுரபி, முன்னணி ஹீரோக்களின் படங்களில் இரண்டாவது நாயகி வேடங்களில் நடிப்பதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த தேசிய விருது பெற்ற நடிகை
சிறந்த நடிகை சுரபி லட்சுமி... படம் மின்னாமினுங்கு!
சூர்யா படத்தில் நடிக்கிறேனா? சுரபி விளக்கம்!
சூர்யா 35 படத்தில் இணைந்த பிரபல நடிகை!
ஜி.வி.பிரகாஷ் படத்தை பெரிதும் நம்பும் சுரபி!
ஜி.வி.பிரகாஷ் ஜோடியான விஐபி நாயகி!
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் அஜித் தான் – பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!
இவன் வேற மாதிரி சுரபியின் தண்டோரா!
சுரபிக்கு அடித்த ஜாக்பாட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions