அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்!

Bookmark and Share

அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்!

சரத்குமார் இயக்கிய மூவேந்தர் படத்தில் இயக்குனரானவர் சுராஜ். அதையடுத்து குங்குமபொட்டு கவுண்டர், மிலிட்டரி படங்களை இயக்கினார்,. பின்னர் தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களை இயக்கியவர் இப்போது அப்பாடக்கர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளையும் முடித்து விட்டார். ஆனால் இந்த படத்துக்கு முன்பு ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தற்போது வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகுதான் அப்பாடக்கரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது தனது புதிய படத்திற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார் சுராஜ். தனது வழக்கமான பாணியில் அதாவது ஆக்சன், காமெடி கலந்த ஒரு கதையை தற்போது அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

அதோடு, தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்தே படம் இயக்கி வந்துள்ள சுராஜ், தனது புதிய படத்தில் நடிப்பதற்கும் சில முன்னணி இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்!
எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்
காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு
நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்!
நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..!
“மஞ்சு வாரியருக்கு விருது கொடுத்தது தான் சரியான காமெடி”- இயக்குனர் பைஜூ கிண்டல்..!
மீண்டும் களத்தில் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions