அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!

Bookmark and Share

அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!

சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை மாஸ் பாடல் என்று சொல்வார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்து விட்டால் அதை மாஸ் பாடலாகி விடும். பெரும்பாலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல ஹீரோக்களின் பாடல்கள்தான் மாஸ் பாடலாக அமையும். அந்த வகையில், விஜய்க்காக வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையிலே சுர்ருங்குதே என்ற ஹிட் பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.

அந்த பாடல் அவருக்கு தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பிறகு நினைத்தாலே இனிக்கும் படத்தில் பன்னாரஸ் பட்டுக்கட்டி என்ற பாடலை எழுதிய அவர், சகுனி படத்தில் கார்த்திக்கிற்காக போட்டது பத்தல மாப்புள்ள இன்னொரு குவார்ட்டரு சொல்லுடா -என்ற மாஸ் குடி பாட்டை எழுதினார்.

அந்த வரிசையில், இப்போது அப்பாடக்கர் படத்தில், ஜெயம் ரவிக்காக, ஹிட்டு சாங்கு மாமா இது ஹிட்டு சாங்கு மாமா, கூட நீயும் வந்து ஒரு குத்து போடு மாமா -என்றொரு பாடலை எழுதியிருக்கிறார் அண்ணாமலை.

இதுபற்றி அவர் கூறும்போது,

நான் இதற்கு முன்பு எழுதிய ஹிட் பாடல் வரிசையில் இந்த ஹிட்டு சாங்கு மாமா பாடலும் கண்டிப்பாக இடம்பிடிக்கும். மேலும், இதற்கு முன்பு தமன் இசையில் பட்டத்து யானையில் தலைகாலு புரியவில்லடி -என்ற பாடலை எழுதிய நான் இரண்டாவதாக பிரசாந்துக்காக மம்பட்டியான் படத்தில் கருப்பண்ண கருப்பண்ண சாமி வர்றான்டா என்ற பாடலை எழுதினேன்.

அதையடுத்து இப்போது அவரது இசையில் இந்த அப்பாடக்கரு படத்துக்காக இந்த ஹிட் சாங்கு பாடலை எழுதியிருக்கிறேன். அந்தவகையில், முந்தைய பாடல்களை விட இந்த பாடல் இன்னும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கும் அண்ணாமலை, அப்பாடக்கர் படத்திலுள்ள பாடல்களில் ஹிட்டு சாங்கு மாமா பாடல்தான் நம்பர் ஒன்னாக வந்திருக்கிறது. பாடலின் வரிகள் ரொம்ப பிரமாதம் என்று அப்படத்தின் டைரக்டரான சுராஜ் சொன்னது தனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருப்பதாக சொல்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions