எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..!

Bookmark and Share

எப்போதும் பெண்களுடனேயே சுற்ற ஆசைப்படும் காமெடி நடிகர்..!

நான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூட் 'ராஜமாணிக்கம்' படத்தில் மம்முட்டிக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர்.

இவர் ஸ்கிரீனில் வந்தாலே போதும் கைதட்டலும் மிமிக்ரியும் பறக்கும்.. குறிப்பாக மைன்ட் வாய்ஸ் காமெடி தான் இவரது ஸ்பெஷல்.. தனது ஆத்ம திருப்திக்காக சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களுக்கு மாறி ரசிகர்களை ஏங்க வைத்தவர், மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பியுள்ளார்.

'அந்நியற்கு பிரேவசமில்லா' (அந்நியர்களுக்கு அனுமதியில்லை) என்கிற படத்தில் பேஸ்கட்பால் கோச்சாக நடித்துவருகிறார் சுராஜ் வெஞ்சாரமூட். எப்போதும் பெண்களுடனேயே இருக்கவேண்டும் என்கிற ஆசைதான் பேஸ்கட்பால் கோச்சாக இவர் மாறுவதற்கு காரணமாம்.

பேஸ்கட்பால் போட்டி ஒன்றில் பங்கேற்க எர்ணாகுளம் வரும் சுராஜ், அங்கே தனது நண்பன் டினி டாம் ரூமில் தங்குகிறார். அப்போது அவரது நட்பை எப்படியெல்லாம் மிஸ்யூஸ் பண்ணுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களமாக பின்னப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தை ஜெயகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார்.


Post your comment





Related News
கொச்சையாக பேசியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் – ஹீரோயின்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்!
எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்
காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு
நாளை முதல் கத்தி சண்டை போடும் விஷால்!
நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழில் நடிக்கும் முதல் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
அடுத்த பட வேலைகளில் இறங்கிய சுராஜ்!
“மஞ்சு வாரியருக்கு விருது கொடுத்தது தான் சரியான காமெடி”- இயக்குனர் பைஜூ கிண்டல்..!
மீண்டும் களத்தில் அஞ்சலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions