நான் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன்: ஆர்.கே.சுரேஷ்

Bookmark and Share

நான் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன்: ஆர்.கே.சுரேஷ்

ஒரு நாயகரை அறிமுகம் செய்வது என்பது வேறு, ஒரு நடிகரை உருவாக்குவது என்பது வேறு. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை உருவாக்குவதில் முன்னோடி என்றே சொல்லலாம்.

அவர் உருவாக்கிய நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற அடைமொழியை தாண்டி கதாப்பாத்திரங்களாகவே மாறும் தன்மையை கொண்டு இருப்பார்கள்.  

சியான் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்தப் பட்டியலில் தற்போது 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'மருது' படத்தில் வில்லனாக வந்துக் கலக்கும் ஆர்.கே. சுரேஷும் இணைகிறார்.

குறைந்தக் காலக்கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த சுரேஷ் நடிப்பின் மேல் உள்ள தனது காதலால், இன்று எல்லோரும் பாராட்டும் ஒரு நல்ல வில்லனாக உருவெடுத்து இருக்கிறார்.

நம்பியார், வீரப்பன் முதல் ரகுவரன், பிரகாஷ் ராஜ் வரை நல்ல வில்லன் நடிகர்களை வரவேற்கும் தமிழ் திரைப்பட உலகம் இவருக்கும் தாரை தப்பட்டையுடன் ரத்தின கம்பள வரவேற்பு கொடுத்து இருக்கிறது. ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தும் தனக்கு தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை கண்டு நெகிழ்ந்துப் போய் இருக்கிறார் சுரேஷ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்கு பொறுப்பும்   கொடுத்து இருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.

இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசிதான் காரணம் என்பேன். நான் ஒரு இயக்குனரின் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று தன் முறுக்கு மீசையை தடவியபடி  கூறினார் ஆர்.கே.சுரேஷ்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions