துறவு வாழ்க்கைக்கு தாவிய சுரேஷ்கோபி...!

Bookmark and Share

துறவு வாழ்க்கைக்கு தாவிய சுரேஷ்கோபி...!

வில்லனாக நடித்தார் என்கிற ரசிகர்களின் மனக்குறையை தவிர 'ஐ' படத்தின் வெற்றியாலும் அதில் தனது நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகளாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார் நடிகர் சுரேஷ்கோபி.

ஒரு நடிகன் எந்த கேரக்டரிலும் நடிக்க தயாராக இருக்கவேண்டும் என சொல்லும் சுரேஷ்கோபி படத்திற்கு படம் தனது கெட்டப்புகளை மாற்றி  நடிக்கவும் தயங்குவதில்லை. 'புல்லட்' என்கிற படத்தில் படம் முழுவதும் சாமியார் கெட்டப்பில் வேத மந்திரங்களை சொல்லிக்கொண்டு அடிதடியிலும் பின்னியிருப்பார் சுரேஷ்கோபி.

இப்போது சிபு கங்காதரன் என்பவர் இயக்கத்தில் அவர் நடித்துவரும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்தில் கூட ஒரு துறவியாக நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என ஆளே மாறியிருக்கிறார் சுரேஷ்கோபி.. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அவரது கெட்டப்பையும் கேரக்டரையும் மிரட்டலாக காட்டுகிறது..

துறவியாக உலாவரும் இவரை ஒரு சிலர் ருத்ரஸிம்ஹன் என்றும் இன்னும் சிலரோ ருத்ரனசன், உஸ்தாத், உடும்பன் எனவும் விதவிதமான பெயர்களில் அழைப்பார்களாம். த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் நிக்கி கல்ராணி, கனிகா, ஸ்வேதா மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions