“ஆம் ஆத்மில சேரப்போறேன்னு கிளப்பி விடுறாங்க” - சீறிய சுரேஷ்கோபி..!

Bookmark and Share

“ஆம் ஆத்மில சேரப்போறேன்னு கிளப்பி விடுறாங்க” - சீறிய சுரேஷ்கோபி..!

அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வது, சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்வது என அரசியலில் எந்நேரமும் இறங்க தயார் நிலையிலயே இருப்பவர் சுரேஷ்கோபி.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியதால் இப்போதுவரை, அவர் பிஜேபியில் சேரப்போகிறார் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்க, ஆரம்பத்தில் இருந்தே அதை மறுத்து வந்தார் சுரேஷ்கோபி. அதுமட்டுமல்ல.. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அளித்துள்ள பேட்டியில் மக்களுக்கு சேவை செய்வதற்காக எந்த கட்சியிலும் சேர தயாராக இருப்பதாகவும், அதற்காக அதிகாரங்களையும் நிறைய உறுப்பினர்களையும்  வைத்திருக்கும் கட்சியில் தான் சேரவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் தனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்தையும் தற்போது ஆம் ஆத்மி டில்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதையும் ஒன்று சேர்த்து அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் சுரேஷ்கோபி.. இரண்டு தினங்களுக்கு முன் பி.ஜே.பியை சேர்ந்த தலைவர் ஒருவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சுரேஷ்கோபி, “சிலர் நான் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.. அவர்களுக்கு உள்ளுக்குள்ளே ஏதோ பிரச்சனை இருக்கிறது.

அதற்கேற்ற மாதிரித்தான் செயல்பாடுகளும் இருக்கின்றன” என்று சீறினார். ஆனாலும் தற்போது ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி சரியான நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது என இறுதியில் அவர் பாராட்டியதுதான் ஹைலைட்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions