என்.எப்.டி.சி சேர்மன் ஆகிறாரா சுரேஷ்கோபி..?

Bookmark and Share

என்.எப்.டி.சி சேர்மன் ஆகிறாரா சுரேஷ்கோபி..?

என்.எப்.டி.சி என்கிற தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் என்பது நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடியவகையில் சிறிய முதலீட்டில் படம் தயாரிக்க விரும்புவோருக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

ஆனால் இப்படி ஒன்று இருப்பது நமது ரசிகர்களுக்கு தெரிய வந்ததற்கு காரணமே இயக்குனர் மகேந்திரன் தான். காரணம் அரவிந்தசாமியை வைத்து அவர் இயக்கிய சாசனம் படத்திற்கு நிதியுதவி செய்தது இந்த அமைப்புதான்.

சொன்ன பட்ஜெட்டை விட அதிகமானதால் அந்தப்படம் குறித்த நேரத்தில் தயாராகாமல் இழு இழு என்று இழுத்து ஒரு வழியாக வெளிவந்தபோது தான், இந்த என்.எப்.டி.சி பிரபலமானது.

ஆனால் சமீபகலாமாக பூனை படுத்து உறங்கும் அடுப்பு போல எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் சுனங்கிப்போய் கிடக்கிறது இந்த என்.எப்.டி.சி. தற்போது இதற்கு புத்துயிர் அளித்து மீண்டும் படங்களை தயாரிக்கவைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளனவாம்.  

அதன் ஒருகட்டமாகத்தான் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியை என்.எப்.டி.சியின் புதிய சேர்மனாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரையும் சுரேஷ்கோபி சந்தித்து பேசியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது. இது நிறைவேறும் பட்சத்தில் ஒரு மாநில அமைச்சரின் பதவிக்கு இணையான என்.எப்.டி.சியின் சேர்மனாக பொறுப்பேற்கும் முதல் மலையாளி சுரேஷ்கோபியாகத்தான் இருப்பார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions