ஐ படத்தினால் அடிபட்டவருக்கு சுரேஷ்கோபி செய்த உதவி!

Bookmark and Share

ஐ படத்தினால் அடிபட்டவருக்கு சுரேஷ்கோபி செய்த உதவி!

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும், கேரளாவிலும் வெளியானது. அனைத்து ஏரியாக்களிலும் ஐ படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றாலும், தமிழ்நாடு ஆந்திராவைவிட கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கடந்த 14-ஆம் தேதி கேரளா முழுக்க வெளியான ஐ படம் இன்று வரை ஹவுஸ்புல்தான்! திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஐ படம் வெளியான அன்று பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் ஈடுபட்டிருந்தபோது, நெரிசலில் சிக்கி கீழே விழுந்திருக்கிறார்.

கூட்டம் அவரை மிதித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது மொத்த உடம்பே செயலிழந்து போய்விட்டதாம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி காவலாளி ஸ்ரீகுமாருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அதோடு, இந்த தகவலை படத்தின் ஹீரோ விக்ரம், மற்றும் இயக்குநர் ஷங்கருக்கும் தெரிவித்த சுரேஷ் கோபி, அவர்களையும் ஸ்ரீகுமாருக்கு உதவி செய்யும்படி வற்புறுத்தி இருக்கிறார். சுரேஷ்கோபியின் பேச்சை தட்டமுடியாமல், நிச்சயம் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்களாம் ஷங்கரும், விக்ரமும். 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions