ஆதிவாசிகளுக்கு டாய்லெட் கட்டிக்கொடுத்த சுரேஷ்கோபி..!

Bookmark and Share

ஆதிவாசிகளுக்கு டாய்லெட் கட்டிக்கொடுத்த சுரேஷ்கோபி..!

மலையாள நடிகர் சுரேஷ்கோபி படங்களில் தான் ஏற்கும் கேரக்டர்போல, நிஜ வாழ்க்கையிலும் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கமுடியுமோ, மக்களுக்கு பயனுள்ள உதவிகளை செய்ய முடியுமோ அதன்படி நடந்து வருபவர்.. பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனையில் கூட அவர்களுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுப்பவர்.

அந்தவகையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத பொங்கன்சுவடி என்கிற மலைப்பகுதி கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு, சுமார் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 32 நவீன கழிப்பறைகள் கட்டிக்கொடுத்து அரசாங்கம் செய்ய தவறியதை செய்து கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அந்த கழிப்பறைகளை திறந்துவைப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த தினம் ஜூன்-26. அன்றுதான் சுரேஷ்கோபியின் பிறந்தநாளும் கூட. கழிப்பறைகளை கட்டி முடித்ததுமே அதை மக்களை பயன்படுத்தச்சொல்லி சொல்லிவிட்டாராம் சுரேஷ்கோபி. ஆனால் ஆதிவாசி மக்களோ தங்களுக்கு இதை கட்டி கொடுத்த சுரேஷ்கோபி வந்தால் தான் ஆச்சு என ஒற்றைக்காலில் நின்றனராம்.

இந்த கழிப்பறை கட்டும் வேலைகளை குருவாயூர் கிட்னி பவுண்டேஷனை சேர்ந்த உமா பிரேமன் முன்னின்று நடத்தி முடித்துள்ளார் (படத்தில் மஞ்சள் கலர் சேலை அணிந்திருப்பவர்).

இதற்காக கடந்த ஜனவரியில் இருந்து ஐந்து மாதங்கள் அந்த சாலை வசதி இல்லாத கிராமத்துக்கு வந்துசென்று டாய்லெட் கட்டும் பணிகளை கவனித்தவர். இவர் சுரேஷ்கோபியிடம் மக்களின் விருப்பத்தை சொல்ல, உடனே சம்மதித்த சுரேஷ்கோபி தனது பிறந்தநாளன்று காலையிலேயே வந்து, ஆதிவாசி மக்களுடன் உணவருந்தி கழிப்பறைகளை பார்வையிட்டு திறந்து வைத்துள்ளார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions