சுரேஷ்கோபியின் டப்பிங்கிற்காக 5 வருடமாக காத்திருக்கும் படம்..!

Bookmark and Share

சுரேஷ்கோபியின் டப்பிங்கிற்காக 5 வருடமாக காத்திருக்கும் படம்..!

சுரேஷ்கோபி இப்படி செய்வாரா என நீங்கள் ஆச்சர்யப்படுவது புரிகிறது.. காரணம் சுரேஷ்கோபியை பொறுத்தவரை சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட எதையும் ஸ்ட்ரெய்ட் பார்வேடாக பேசுவது, அதன்படி நடப்பதையே கொள்கையாக கடைபிடித்து வருபவர். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த அவரது கருத்துக்களை படித்தவர்களுக்கும், உடன் பழகியவர்களுக்கும் அது நன்றாகவே தெரியும்.

விஷயத்தை படித்துவிட்டு அவர் செய்தது சரியா தவறா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.. ஐந்து வருடங்களுக்கு முன்பு 'காவ்யம்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் சுரேஷ்கோபி. படத்தின் கதாநாயகி நவ்யா நாயர்.

படத்தை அனீஸ் வர்மா என்கிற அறிமுக இயக்குனர் தான் இயக்கினார். படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பைனான்ஸ் தட்டுப்பட்டால் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்றுவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் எப்படியோ போஸ்ட் புரடக்சன் வேலைகளை ஆரம்பித்தவர்கள் சுரேஷ்கோபியை டப்பிங் பேச அழைத்தார்கள். சுரேஷ்கோபி தனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை செட்டில் செய்தால் தான் வருவேன் என சொல்லிவிட்டார்.

ஒருவழியாக சுரேஷ்கோபிக்கு தரவேண்டிய பாக்கி பணம் 1௦ லட்ச ரூபாயை புரட்டி, அவரிடம் தர, சுரேஷ்கோபியோ தற்போது தனது சம்பளம் ஏறிவிட்டதாக சொல்லி 7௦ லட்ச ரூபாய் கேட்டாராம். சுரேஷ்கோபிக்கு பேசப்பட்ட மொத்த சம்பளமே 40 லட்ச ரூபாய் தானாம்.

இப்படி திடீரென சுரேஷ்கோபி முரண்டு பிடித்ததால், கிட்டத்தட்ட 5 வருட காலமாக ரிலீசை எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர் காவ்யம் படமும் அதன் இயக்குனரும்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions