தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா! – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’!

Bookmark and Share

தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா! – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’!

சென்னை: தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றிப் பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் அந்த தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருள்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசினார்.

சென்னை பிரசாத் லேபில் நேற்று நடந்த சாரல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இங்கு பேசிய பலரும் இது ஒரு குடும்ப விழா என்றார்கள்.

ஒரு இசை வெளியீட்டு விழா குடும்ப விழாவாக இருக்கக் கூடாது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் சிறு பட்ஜெட் படங்களை பிரபலமாக்குவதற்கு உள்ள வழி. இந்த நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களைத்தான் அதிகம் அழைக்க வேண்டும்.

சிறிய படங்கள் மக்களைச் சென்றடைய பத்திரிகையாளர்கள், குறிப்பாக இணையதளங்கள்தான் முக்கியம்.

இப்போது படங்கள் எடுப்பதைவிட, அதை எடுத்து வெளியிடுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. இப்போது கூட செங்கல்பட்டு ஏரியா திரையரங்குகளில் படம் வெளியிட முடியாத சூழலை சிலர் உருவாக்கியுள்ளனர். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம்.

தாணு என்ற பெரிய தயாரிப்பாளருக்கே இந்த நிலை என்றால், சிறு பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இவர்களிடம் என்ன பாடுபடுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தியேட்டர்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும், படங்களுக்கு எம்ஜி முறை கூடாது என்றெல்லாம் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். கட்டணத்தைக் குறைப்பது இருக்கட்டும். முதலில் அங்குள்ள கேண்டீன்களில் விற்கப்படும் பாப்கான், தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பாருங்கள்.

தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் போகக் காரணம் என்ன? திருட்டு விசிடி மட்டுமா… என்னதான் இணையதளங்களில் படங்கள் வெளியானாலும், நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்காமல் இருந்ததில்லை. ஆனால் அப்படிப் பார்க்க நல்ல அரங்குகள் வேண்டாமா?

சென்னைக்கு வெளியே பல தியேட்டர்கள் மக்கள் படம் பார்க்கும் நிலையிலா இருக்கின்றன? அடிப்படை வசதி இல்லை. கேன்டீன்களில் அநியாய விலை. தேவையற்ற பார்க்கிங் கட்டணம் இப்படி ஏகப்பட்ட குறைகளைச் சொல்கிறார்கள் மக்கள். இதனால் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள்.

அதே போல தயாரிப்பாளர்களுக்குத் தரவேண்டிய சதவீதத்தை யாரும் ஒழுங்காகத் தருவதில்லை. சென்னை அரங்குகள் சரியாகத் தருகின்றன. ஆனால் மற்றவர்கள் அப்படியா… தினந்தோறும் மக்களிடம் பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பணத்தை வாரம் ஒரு முறையாவது தயாரிப்பாளருக்குத் தருகிறார்களா? இல்லை.

பல தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களுக்குரிய பங்கைத் தந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இப்படி சினிமாவை முடக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வந்தால்தான் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடியும்.

இந்த சாரல் படம் வெளிவரும்போது, நல்ல சூழல் அமைந்து படமும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.​

 


Post your comment

Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions