சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!

Bookmark and Share

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின்

செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு... இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். 

முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு. 

தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது. 

படத்திற்கு "மாநாடு" என பெயர் சூட்டியிருக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்...  களத்திலும்  சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது.  மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions