கதை விவாதத்தில் சுரேஷ் கிருஷ்ணா!

Bookmark and Share

கதை விவாதத்தில் சுரேஷ் கிருஷ்ணா!

கமல் நடித்த சத்யா படத்தில் இயக்குனரானவர் சுரேஷ்கிருஷ்ணா. அதையடுத்து ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, பாபா என முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார்.

ஆனால் விஜயகாந்த் நடித்த கஜேந்திராவுக்கு பிறகு அவர் இயக்கிய பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் சரிந்தது.

அதனால் சின்னத்திரைக்கு சென்று சில தொடர்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரெடி பண்ணி ரஜினியை அணுகினார்.

ஆனால் அவரோ, என்னதான் வித்தியாசமான கதை என்றாலும், பாட்ஷாவை மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பது அரிதான விசயம் என்று சொல்லி அந்த முயற்சியை கைவிட சொல்லிவிட்டார்.

இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே ஒரு படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் சுரேஷ்கிருஷ்ணா ஈடுபட்டிருக்கிறார். அதன்காரணமாக, யாராவது தன்னை சினிமா ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால்கூட இப்போது என்னால் வரஇயலாது என்று மறுத்து வருகிறார்.

அதன்காரணமாக, சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ள சதுரன் படத்தின் இசை விழாவுக்கு அழைத்தபோதுகூட தன்னால் இப்போது வரமுடியாது என்று கூறி விட்டாராம் அவர்.

ஆனபோதும், தனது முதல் பட விழாவுக்கு குருநாதர் வராமல் இருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த ராஜீவ் பிரசாத், சுரேஷ்கிருஷ்ணா சொல்லும் தேதியில் சதுரன் ஆடியோ விழாவை நடத்த முடிவு செய்து அவர் சொல்லும் தேதியில் ஆடியோ விழாவை நடத்த காத்துக்கொண்டிருக்கிறார்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions