நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி- மசாலாப்பட வெற்றியை கூறிய சுரேஷ்கிருஷ்ணா

Bookmark and Share

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி- மசாலாப்பட வெற்றியை கூறிய சுரேஷ்கிருஷ்ணா

சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் சினிமா குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் மற்றும் சினிமாவிற்குள் இருக்கும் விஷயங்களைக்  கையாண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் மசாலாப் படத்தில் மிர்ச்சிசிவா, பாபிசிம்ஹா, லட்சுமிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ‘‘இது கதையே இல்லாத ஆனால் இருக்கின்ற படம்.  இந்த படத்தின் டைட்டில் கார்டிலேயே உருவாக்கம், இயக்கம் - லக்‌ஷ்மண் குமார் என்று தான் போட்டிருக்கிறார்கள். இப்படத்தை பொறுத்தவரை அது தான் பொருத்தம். 

நாம்  ஒரு காஃபி ஷாப்புக்குப் போனால் அங்கு அதிகமாகப் பேசப்படும் விஷயம் சினிமா, அரசியல் அல்லது கிரிக்கெட்டாக தான் இருக்கும். அப்படி சினிமா குறித்து பொதுவாகப் பேசப்படுகிற விஷயங்களைத் தான் இப்படத்தின் இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் மசாலாப்படமாக்கியிருக்கிறார். இது ஒரு புது ஜானர் படம். 

இப்படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை யாராலும் யூகிக்க முடியாது. யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸுடன் இப்படத்தை முடித்திருக்கிறார்கள். ‘மசாலா’ படத்தை பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் இப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும். நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி’’ என்றார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions