சுரேஷ்கிருஷ்ணாவுக்கு மீண்டும் சினிமா ஆசையை உருவாக்கிய வதந்தி!

Bookmark and Share

சுரேஷ்கிருஷ்ணாவுக்கு மீண்டும் சினிமா ஆசையை உருவாக்கிய வதந்தி!

1988-ல் கமல் நடித்த சத்யா படம் மூலம் இயக்குனரானவர் சுரேஷ் கிருஷ்ணா. பின்னர் ரஜினி நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா என பல மெகா படங்களை இயக்கினார். பா.விஜய் நடித்த இளைஞன் படம்தான் அவருக்கு கடைசி படமாகியது.

பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சமீபகாலமாக அவர் டிவி சீரியல்கள் இயக்கிக்கொண்டிருக்கிறார். அதனால் மீண்டும் சினிமாவுக்கு வரும் ஆசை அவருக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், சமீபத்தில் பாட்ஷா-2 கதையை அவர் அஜித்தை வைத்து இயக்குவதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்த செய்தி அவரது காதுக்கு சென்றபோது அதிர்ச்சியடைந்து விட்டாராம்.

அதையடுத்து தன்னை நோக்கி பாய்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மறுத்தார். ஆனபோதும், இப்போது அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். பாட்ஷா-2 கதையை ரஜினியிடம் சொன்னபோது, அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடித்தால் அதைவிட மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும்.

ஆனால் பாட்ஷாவுக்கு இணையாக இன்னொரு ஹிட்டை கொடுக்க முடியாது அதனால் அந்த முயற்சியை விட்டு விடலாம் என்று கூறி விட்டாராம். அதனால்தான் பாட்ஷா-2 கதையை அப்படியே வைத்து விட்டார் சுரேஷ்கிருஷ்ணா.

ஆனால் இப்போது அந்த கதையையே அஜித்தை வைத்து இயக்குவதாக வெளியான செய்தி வதந்தியாக இருந்தபோதும், அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த சினிமா இயக்குனரை தட்டி எழுப்பி விட்டதாம். அதனால் யாராவது முன்னணி ஹீரோக்களின் கால்சீட் கிடைத்தால் மறுபடியும் படம் இயக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் சுரேஷ்கிருஷ்ணா. 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions