ரிலீசுக்கு முன் ஏன் இப்படி ? ...சூர்யா ஆச்சரியம்...

Bookmark and Share

ரிலீசுக்கு முன் ஏன் இப்படி ? ...சூர்யா ஆச்சரியம்...

ஒரு படம் படப்பிடிப்பு ஆரம்பமாவதிலிருந்து அதைப் பற்றிய பல செய்திகள் வந்தாலும் அப்போதெல்லாம் கண்டு கொள்ளாமல், பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன் அந்தப் படத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக  சிலர் எதிர்க்க நினைப்பது திரையுலகத்திற்குள் கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது.

அதன் வெளிப்பாடாகத்தான் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்ட 'கொம்பன்' படப் பிரச்சனைக்காக நேற்று தமிழ்நாடு திரையுலகக் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

வெளியீட்டிற்கு முன்னர்தான் வழக்கு தொடுப்பது, அப்போதுதான் பிரச்சனைகளைக் கிளப்புவது பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் படத்திற்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் நேற்று விவரித்தனர்.

இந்த நிலையில் 'கொம்பன்' படத்தின் நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, “கொம்பன்'' படம் அழகான உறவுகளைப் பற்றிய படம்.

படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏன் இப்படி திடீரென உணர்வுபூர்வமான நிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை,” என அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் ஆகியோரின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்சார் போர்டு முடிவை ஏற்றுக் கொண்டு, அதற்கு மரியாதை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions