சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் தலைப்பு மாற்றம்?

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் தலைப்பு மாற்றம்?

சிங்கம் 3 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வருகின்ற 7 ம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்திருக்கிறார்.

சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து அதன் 3 வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஹரி இறங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சுருதிஹாசன், அனுஷ்கா என்று 2 நாயகிகள் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சுருதிஹாசன் சிஐடி அதிகாரியாக நடிக்க, அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக சிங்கம் 3 யில் நடிக்கிறார்.தொடர்ந்து தள்ளிப் போன இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு வேறு ஒரு தலைப்பினை வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இந்தத் தலைப்பு நியுமராலஜி அடிப்படையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் 2 படங்களுக்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.(முதலில் அனிருத் ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது) இந்தப் படத்தின் படப்பிடிப்பினை பல்வேறு கண்டங்களில் நடத்த ஹரி முடிவு செய்திருக்கிறார். 

மேலும் முதல் 2 பாகங்களை விட இந்தப் பாகத்தில் அதிரடியை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் இந்தப் பாகத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு குறையிருக்காது என்று கூறுகின்றனர். 

சிங்கம் 3 தமிழில் வெளியாகும் பட்சத்தில் தமிழில் அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை தட்டிச் செல்லும். ஏற்கனவே எந்திரன் 2 படத்தின் தலைப்பை எந்திரன் 2.0 என்று இயக்குநர் ஷங்கர் மாற்றிய நிலையில், தற்போது சிங்கம் 3 படத்தின் தலைப்பை ஹரி மாற்ற முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions