ஈரோட்டின் வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்: சூர்யா பேச்சு

Bookmark and Share

ஈரோட்டின் வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்: சூர்யா பேச்சு

ஒளிரும் ஈரோடு அமைப்பின் அறிமுக விழா ஈரோடு திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. ஒளிரும் அமைப்பின் தலைவர் அக்னி சின்னசாமி வரவேற்று பேசினார்.

விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன்பிறகு ஒளிரும் ஈரோடு பவுண்டேசனுக்கான பாடல் சி.டியை நடிகர் சூர்யா வெளியிட்டார். 

ஈரோட்டை மாற்றி காட்டப்போகிறோம் என்று சபதமேற்று இங்கு முன் உதாரணமாக நீங்கள் வந்து உள்ளீர்கள். உங்களின் அன்பு இல்லாமல் எதுவும் நடக்காது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஈரோடு எனக்கு புதுசு இல்லை.

40 வருடமாக இங்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறேன். எனக்கு சொந்த ஊர் மாதிரி ஈரோடு திகழ்கிறது, மற்ற ஊர்களுக்கு முன் மாதிரியாக எப்போதும் ஈரோடு விளங்குகிறது. 

காளிங்கராயன் ஓடை–பெரும்பள்ளம் ஓடை என்ற இரு ஓடைகள் இங்கு உள்ளதால் இந்த ஊருக்கு ஈரோடு என்று பெயர் வந்தது. 1927–ம் ஆண்டு காந்திக்கு முதலில் சிலை வைத்தது ஈரோடு தான்.

இளைய தலைமுறையினர் ஈரோட்டின் வரலாற்றை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். புரட்சியும்–அமைதியும் சேர்ந்ததுதான் ஈரோடு. அழகான எதிர்காலத்தை நோக்கி ஒளிரும் ஈரோடு தொடங்கப்பட்டு உள்ளது. இது மக்களுக்கான இயக்கம். 

நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் எதுவும் சாத்தியம் ஆகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈரோட்டை மாற்றி காட்டுவோம். வயதான பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயை வெளியில் அழைத்து சென்றார்.

அப்போது அது ரோட்டில் அசிங்கம் செய்து விட்டது. எனவே அந்த பெண் அந்த அசிங்கத்தை ஒரு பேப்பரில் எடுத்து சென்று அதை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றார். இந்த மாதிரியான உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். ஒளிரும் ஈரோடு தொடங்கப்பட்ட நாள் ரொம்ப முக்கிய நாளாக இருக்க வேண்டும் ஒளிரும் ஈரோடு அமைப்பை பள்ளி மாணவ–மாணவிகளும் எடுத்து செல்லவேண்டும்.

வீடுகளில் இதை பற்றி பேசி ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்க வேண்டும். ஒளிரும் ஈரோடு போல மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும். இதற்கு ஈரோடு முன் உதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் ஒளிரும் ஈரோடு குறித்த உறுதி மொழியை நடிகர் சூர்யா வாசிக்க அதை மற்றவர்கள் திரும்ப கூறி உறுதி மொழி எடுத்து கொண்டனர். விழாவில் நடிகர் சூர்யா பேச தொடங்கியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் விசில் அடித்தனர். இதை பார்த்து சந்தோசப்பட்ட நடிகர் சூர்யா விசில் அடிக்க எனக்கும் மூடு இருக்கிறது என்று கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

விழாவில் ஒளிரும் ஒளிரும் அமைப்பின் நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், டாக்டர் அபுல் ஹசன், கே.கே.ரபிக், யு.ஆர்.சி.தேவராஜன், மற்றும் உலக சமுதாய சேவா மைய தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன், சக்தி மசாலா பி.சி. துரைசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், தொழில் அதிபர் சந்திரசேகர் டாக்டர்கள் சகாதேவன், ராமகிருஷ்ணன், அமைப்பின் அறங்காவலர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், சத்திய மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

 


Post your comment

Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions