ஜாக்கிசான் பாணியில் சாகச சண்டையில் சூர்யா!

Bookmark and Share

ஜாக்கிசான் பாணியில் சாகச சண்டையில் சூர்யா!

சிங்கம் படத்தில் தூத்துக்குடியில் ஒரு சிறிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம் என்கிற சூர்யா, பின்னர் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராகி ரவுடிகளை அழிப்பார்.

சிங்கம்-2 படத்தில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து, ஒருகட்டத்தில் தூத்துக்குடி கடல்பகுதியில் நடக்கும் போதை கடத்தல் கும்பலை கண்டுபிடித்து சிறைபிடித்தார்.'

இப்பொழுது அவர் அடுத்து சிங்கம்-3 படத்தில் நடிப்பதற்காக தயாராகிக்கொண்டுள்ளார். முதல் இரண்டு பாகங்களிலும் தமிழ்நாடு போலீசாக நடித்த சூர்யா, இந்த 3வது பாகத்தில் இந்திய காவல்துறை சிஐடி வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, வில்லன் டேனியை ஜெயிலில் அடைத்து விடுவதோடு அவர் வேலை முடியவில்லையாம்.

அவருக்கு உள்நாடு, வெளிநாடுகளில் எந்தெந்த நபர்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இந்த பாகத்தில் கண்டுபிடிப்பது தான் சூர்யாவின் முக்கிய வேலையாம். அதனால், இந்த சிங்கம்-3 படத்தில் உள்நாட்டை விட வெளிநாடுகளில் தான் அதிக காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். 

மேலும் ஜாக்கிசான் படங்களைப் போன்று வெளிநாட்டு வீதிகளில், கட்டிடங்களில் துள்ளிக்குதித்து சூர்யா சாகச சண்டை செய்யும் காட்சிகளும் இந்த பாகத்தில் அதிகமாக உள்ளதால், ஹரியின் முந்தைய படங்களை விட இந்த படம் ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு இணையாக சிங்கம்-3 உருவாக உள்ளது.


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions