சூர்யாவை ஒரே நாளில் தொடர்ந்த 50 ஆயிரம் பேர்

Bookmark and Share

சூர்யாவை ஒரே நாளில் தொடர்ந்த 50 ஆயிரம் பேர்

தமிழ்த் திரையுலக நடிகர்களும் ஒவ்வொருவராக சமூக வலைதளம் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் புதிய வரவாக நேற்று நடிகர் சூர்யா டிவிட்டரில் இணைந்தார்.

நேற்று காலை டிவிட்டரில் இணைந்த சூர்யாவுக்கு அவருடைய ரசிகர்கள் நிறையவே வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். 24 மணி நேரத்திற்குள்ளாகவே சூர்யாவை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே டிவிட்டரில் உள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த் போன்றோர் மட்டுமே டிவிட்டரில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் இணைந்த ஆர்யா தற்போது எந்தப் பதிவையும் போடவில்லை. கடந்த ஆண்டு ’கோச்சடையான்’ படம் வெளியானதை ஒட்டி, மே மாதம் டிவிட்டரில் இணைந்த ரஜினிகாந்த் அதன் பிறகு டிசம்பரில் மட்டுமே அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றிப் போட்டார். அதன் பிறகு மீண்டும் அவர் டிவிட்டர் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.  

சூர்யா, நேற்று டிவிட்டர் கணக்கை ஆரம்பித்ததுமே அதே பெயரில் மேலும் சில புதிய கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு போலி கணக்குகளும் உலா வருகின்றன.

அவற்றை களைவதற்கும் சூர்யா நடவடிக்கை எடுக்க வேண்டும். சூர்யாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமான Suriya_offl  டிவிட்டரால் அங்கீகரிக்கப்பட்ட பக்கமாக நேற்றே உறுதி செய்யப்பட்டது.

சூர்யா தற்போது  ‘மாஸ்’ படத்தில் நடித்து வருவதோடு, சில படங்களையும் தயாரித்து வருகிறார். அதனால், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதில் அவருடைய படங்களை ரசிகர்களிடம்  கொண்டு போய் சேர்க்க முடியும். சூர்யாவைத் தொடர்ந்து விரைவில் கார்த்தியும் டிவிட்டரில் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions