நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் – சிவகார்த்திகேயனை மிரட்டும் சூர்யாவின் உறவினர்!

Bookmark and Share

நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் – சிவகார்த்திகேயனை மிரட்டும் சூர்யாவின் உறவினர்!

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக ரெமோ நன்றி விழாவில் கண்ணீர்விட்டு பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இவரது கால்ஷீட்டை வாங்கிவைத்து தங்களுக்கு இவர் படம் பண்ண வேண்டும் என மிரட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்கு மட்டும்தான் கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம். அதன்படி விரைவில் இவர் ஞானவேல் ராஜா பேனரில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புதல் வழங்கியுள்ளாராம்.

அதேசமயம் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கும் படத்தில் இவர் நடிக்க தொடங்கிவிட்டார். இதனால் விரக்தியடைந்த ஞானவேல் ராஜா, ” சிவகார்த்திகேயன் எனக்கு படம் பண்ணவில்லை என்றால் நான் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாவேன்.

எனக்கு நியாயம் கிடைக்கும் என போராடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை தவிர எனக்கு வேறு வழியில்லை” என வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் தகவல் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யாவின் நெருங்கிய உறவினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions