ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

Bookmark and Share

ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு படம் குறித்த நல்ல விஷயங்கள் வெளிவருகிறதோ இல்லையோ கெட்ட விஷயங்கள்தான் வேகமாக பரவி வருகின்றனது.
குறிப்பாக டுவிட்டரில் தங்களுடைய பிரியமான நடிகர்களின் படம் வெளியாகும் போது அப்படம் குறித்த டிரெண்ட்டை உருவாக்கி வருகின்றனர். நடிகர்களும் தங்களுடைய படத்தை பற்றி சில தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த படம் சரியாக இல்லையென்றால் அதற்கென தனியாக ஒரு டிரண்டை உருவாக்கி அதன்மூலம் நெகட்டிவ்வான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் சண்டை போட்டு வந்தார்கள். இதையறிந்த விஜய் வன்மையாக கண்டித்தார்.
தற்போது சூர்யாவின் ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். சூர்யாவின் ‘மாசு’ படம் வெளியானத்தில் இருந்து படம் குறித்து நெகட்டிவ்வான கருத்துக்கள் டுவிட்டரில் உலா வரத் தொடங்கியது. இது சூர்யாவின் ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
அவர்களும் மற்ற நடிகர்களை விமர்சித்து கருத்துகளை பகிர ஆரம்பித்தனர். இது பெரும் சண்டையாக உருவெடுக்க ஆரம்பித்தது.
இதையறிந்த சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு, என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் யாரும் மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு சண்டை போடாதீர்கள்.
உங்களுடைய அதிக நேரத்தை உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்து அவர்களுக்கு பெருமை சேருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதை சூர்யா முறைப்படி அறிவித்த பிறகே அவரது ரசிகர்கள் அமைதியானார்கள்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions