மூன்று வேடத்தில் நடிக்கும் சூர்யா?

Bookmark and Share

மூன்று வேடத்தில் நடிக்கும் சூர்யா?

சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாசு’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ப்ரணிதா நடித்திருந்தார்கள்.
இப்படத்தையடுத்து தற்போது சூர்யா நடித்து வரும் படம் ‘24’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மனம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூர்யா இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, தாத்தா, மகன், பேரன் என மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். இதற்காக தனது உடற்கட்டை மாற்றி அமைத்து வருகிறாராம் சூர்யா.
இயக்குனர் விக்ரம் குமார் ஏற்கனவே ‘மனம்’ படத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நாகேஷ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என்று மூன்று பேரை தாத்தா, மகன், பேரன் என்று நடிக்க வைத்திருந்தார். தமிழில் சூர்யா ஒருவரை வைத்து மூன்று விதமான வேடங்களில் நடிக்க வைப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions